![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/MixCollage-06-Feb-2025-07-42-PM-9897.jpg)
கோலாலம்பூர், பிப் 6 – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் ஷக்கிர் நய்க் (Zakir Naik) மலேசியாவில் சொற்பொழிவு ஆற்றக்கூடாது என்று கூறப்படும் தடை உத்தரவின் நிலை குறித்து ஆராயப்படும் என உள்துறை அமைச்சர் சைபுடின் நசுட்டியோன் இஸ்மாயில் ( Saifuddin Nasution Ismail ) தெரிவித்திருக்கிறார்.
ஷக்கிர் நய்க் (Zakir Naik) மீதான தடை இன்னும் நடைமுறையில் உள்ளதா அல்லது திரும்பப் பெறப்பட்டதா என்று கேட்டதற்கு, நான் இதை முதலில் சரிபார்க்கிறேன் என்று சைபுடின் FMTயிடம் கூறினார்.
கடந்த மாதம் பெர்லீஸில் நடந்த ஒரு நிகழ்வில் ஷக்கிர் நய்க் உரை நிகழ்த்திய பிறகு, இந்த உத்தரவின் நிலையை தெளிவுபடுத்துமாறு கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான DAP யைச் சேர்ந்த V.கணபதி ராவ் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து சைபுடின் இதனை தெரிவித்தார்.
ஜனவரி 24 முதல் 26 வரை பெர்லீஸ் அனைத்துலக Sunnah மாநாட்டில் மக்களிடையே ஷக்கிர் நய்க் உரையாற்றியதாக Scoop news தகவல் வெளியிட்டிருந்தது. முஸ்லீம் அல்லாதவர்களுக்கு நம்பிக்கையைப் பரப்ப அனுமதிக்கும் சட்டங்களை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று கூறி, இஸ்லாத்தைப் பரப்புவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தும்படி மலேசிய முஸ்லிம்களுக்கு அக்கூட்டத்தில் ஷக்கிர் நய்க் அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டது.
மதமாற்ற முயற்சிகள் இல்லாததற்காக மறுமையில் முஸ்லீம்கள் பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். பொதுமக்கள் முன்னிலையில் ஷக்கிர் நய்க் சொற்பொழிவு ஆற்றுவதற்கு பெர்லீஸ் mufti Asri Zainul Abidin அனுமதி வழங்கியிருந்ததாக அம்மாநில பத்வா (Fatwa ) குழுவின் உறுப்பினர் ரோசைய்மி ரம்லி ( Rozaime Ramle ) கூறியிருந்தார்.