![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/01/MixCollage-09-Jan-2025-12-51-PM-7987.jpg)
ஷா அலாம், ஜன 9 – ஷா அலாம் செக்சன் 22 இல் உள்ள Xin Hua கிடங்கு கட்டிடத்திற்கு அருகேயுள்ள Sungai Damansara ஆற்றில் ஆடவரின் சடலம் மிதந்த நிலையில்
கண்டுப்பிடிக்கப்பட்டது. நேற்று காலை மணி 11.14 அளவில் அந்த சடலம் காணப்பட்டது குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றதாக ஷா அலாம் மாட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார். அந்த நபரின் உடலில் எந்தவொரு ஆவணமும் கிடைக்கவில்லை என்பதால் அவரைப் பற்றிய அடையாளம் எதுவும் தெரியவில்லை .
கருஞ்சிவப்பு டீ சட்டையும் கருப்புநிற காற்சட்டையும் அணிந்திருந்த அந்த ஆடரின் தோள்பட்டையில் BCG தடுப்பூசி போட்டதற்கான அடையாளம் காணப்படவில்லை. மேலும் கைகலப்பில் சம்பந்தப்பட்ட அறிகுறி அல்லது எந்தவொரு காயங்களும் அந்த ஆடவரின் உடலில் காணப்படவில்லை. அவரது சடலம் உடல் ஷா அலாம் மருத்துவமனைக்கு சவப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டதாக முகமட் இக்பால் தெரிவித்தார்.