
ஷா ஆலாம், பிப்ரவரி-22-ஷா ஆலாம் சுற்றுப் பகுதியில் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குடியிருப்பு பகுதிக்கு அருகில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், சில சந்தேக நபர்கள் பொது பயன்பாட்டு கேபிள்களை வெட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கி, சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து தகவல் தெரிந்தோர் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இத்தகைய கேபிள் திருட்டு மின்சார விநியோகத்தை பாதிப்பதோடு, பொது மக்களின் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
தவிர, பெரிய பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துவதாக அதிகாரிகள் கூறினர்.



