Latestமலேசியா

IQ புத்திக் கூர்மையில் உலகளவில் மலேசியர்களுக்கு 22-ஆவது இடம்

கோலாலம்பூர், மே-6, உலகளவில் புத்திக் கூர்மையில் மலேசியர்கள் முதல் 25 இடங்களில் வந்துள்ளனர்.

International IQ Test வெளியிட்ட அண்மையப் பட்டியலில் மலேசியா 22-ஆவது இடத்தைப் பிடித்தது.

19 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், மலேசியர்களின் சராசரி IQ குறியீடு 100.48 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

இதன் மூலம் தென் கிழக்காசியாவில் சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்து மலேசியா மூன்றாவது இடத்தை வகிக்கிறது.

சிங்கப்பூர் உலகளவில் ஐந்தாவது இடத்திலும், தாய்லாந்து 15-ஆவது இடத்திலும் உள்ளன.

மற்றோர் அண்டை நாடான இந்தோனேசியா 98-ஆவது இடத்தில் உள்ளது.

இந்தோனேசியர்களின் சராசரி IQ குறியீடு 93.18-டாக உள்ளது.

ஆசியளவில் மலேசியா 10-ஆவது இடத்தில் இருக்கின்றது.

தொற்று நோய், உணவுப் பழக்க வழக்கம், அறிவுசார் நடவடிக்கைகள், பரம்பரை உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் ஒரு நாட்டின் சராசரி IQ அளவிடப்படுகிறது.

தொற்று நோய் விகிதம் அதிகமுள்ள நாடுகளில் மக்களின் IQ பொதுவில் குறைவாகவே இருக்கும்; அதே சமயம், ஆரோக்கியமான உணவுப் பழக்கமுள்ள மற்றும் பசி பட்டினி இல்லாத நாடுகளில் IQ நல்ல நிலையில் இருக்கும்.

சதுரங்கம் போன்ற அறிவுசார் நடவடிக்கைகள் அதிகமாக உள்ள மக்கள் மத்தியில் IQ உயர்வாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!