Latestமலேசியா

ஷா ஆலாமில் சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் தாக்கப்பட்ட பெண்ணைத் தேடும் போலீஸார்

ஷா ஆலாம், ஏப்ரல்-19- சிலாங்கூர், ஷா ஆலாம், செக்ஷன் 15, Taman Budiman Valley-யில் உள்ள சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில், ஒரு பெண் உடல் ரீதியாகத் தாக்கப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.

கைப்பேசியில் வீடியோவாகப் பதிவுச் செய்யப்பட்டு வாட்சப்பில் அது பகிரப்பட்டதாக, ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் மொஹமட் இக்பால் கூறினார்.

ஓர் ஆடவரால் அப்பெண் சரமாரியாகத் தாக்கப்படுவது வைரலான 21 வினாடி வீடியோவில் தெரிகிறது.

இந்நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர் என நம்பப்படும் 24 வயது பெண், நேற்று மாலை போலீஸில் புகார் செய்தார்.

சாலை சமிக்ஞை விளக்கில் நின்ற போது, காலில் செருப்பில்லாமல் பாஜூ கூரோங் அணிந்திருந்த பெண் காரை நிறுத்தி உதவிக் கேட்டதாக, புகார்தாரர் கூறினார்.

ஆனால் அவர் காரிலிருந்து தான் வைரலான வீடியோ பதிவுச் செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து இதுவரை புகார் பெறப்படவில்லை.

அவர் முன்வந்து புகாரளித்தால் தான், மேற்கொண்டு விசாரணைகளை நடத்த முடியுமென இக்பால் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!