டெல்லி, டிசம்பர் 24 – வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை நாடு கடத்துமாறு இந்திய அரசுக்கு வங்காளதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய அரசுக்கு அதிகாரப்பூர்வக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஹசினாவை நீதித்துறையின் முன் நிறுத்துவதற்கு நாடு திரும்ப வலியுறுத்தியுள்ளதாகவும், இடைக்கால அரசின் வெளிநாட்டு ஆலோசகர் தவ்ஹீத் ஹொசைன் (Touhid Hossain) தெரிவித்துள்ளார்.
வங்காளதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, முன்னாள் பிரதமரான ஹேக் ஹசீனா பதவி விலகி, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.