
ஸ்கூடாய், மார்ச்-9-ஜோகூர், ஸ்கூடாயில் விரைவுப் பேருந்து தடம்புரண்டு சாலையோரமாக தலைக் குப்புறக் கவிழ்ந்ததில், 10 பயணிகள் காயமடைந்தனர்.
அவர்களில் இருவர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
நேற்றிரவு 8 மணியளவில் Batu 11, Kampung Sepakat Baru-வில் இவ்விபத்து நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு – மீட்புத் துறை, சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி, பேருந்து ஓட்டுநர் உட்பட அனைவரையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிக்சை வழங்கப்பட்டு அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.



