
ஸ்ரீ கெம்பாங்கான், ஜனவரி-26-சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள ஸ்ரீ நவசக்தி துர்கை அம்மன் பாண்டி முனி ஆலயத்தில் நேற்று முந்தினம் நம்பிக்கை பொங்கல் விழா 2026 சிறப்பாக நடைபெற்றது.
பூச்சோங் நாடாளுமன்றமும், ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்தன.
இவ்விழா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெறுகிறது; கடந்தாண்டு செர்டாங் ராயா, ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.
விழாவை பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் Yeo Bee Yin மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் Wong Siew Ki
பொங்கல் வைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் பரதநாட்டியம், கோலாட்டம், சிலம்பம் ஆகிய கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில் சிறப்பம்சமாக, சுமார் 410 B40 குடும்பங்கள் ஸ்ரீ கெம்பாங்கான் சுற்றுவட்டாரத்தில் உள்ள 6 ஆலயங்கள் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் RM100 பற்றுச் சீட்டு வழங்கப்பட்டது.
தவிர, 100 மாணவர்களுக்கு ‘அங் பாவ்’ அன்பளிப்பும் வழங்கப்பட்டது.
ஆலயத் தலைவரும் விழா ஒருங்கிணைப்பாளருமான செல்வம் வையாபுரி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரின் மானியத்துக்கு நன்றித் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசு 60 வயதுக்கு மேற்பட்ட பதிவுச் செய்த வாக்காளர்களுக்கு வழங்கும் Skim Mesra Usia Emas குறித்து சட்டமன்ற உறுப்பினர் Wong Siew Ki பேசினார்.
பொங்கல் தமிழர் திருநாள் விழாவோடு உதவும் கரங்களாகவும் நிகழ்ச்சி அமைந்தது குறித்து பூச்சோங் எம்.பி Yeo Bee Yin மகிழ்ச்சித் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பூச்சோங் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் அமைந்துள்ள 10 ஆலயங்களுக்கு 208, 000 ரிங்கிட் மானியம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இந்த மானிய உதவிக்கு நன்றித் தெரிவித்த மலேசிய இந்து சங்ககத்தின் செர்டாங் பேரவையின் தலைவர் சந்துரு கணேசன், இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
விழாவில் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு, வழங்கப்பட்ட உதவிக்கு நன்றி தெரிவித்தனர்.
இத்தகைய மக்கள் நல நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என எதிர்பார்ப்பு விழாவில் எதிரொலித்தது.



