
செமினி , மே 19 – காஜாங் தாமான் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பாலர் பள்ளிக்கு 55 அங்குல விவேக தொலைக்காட்சி சாதனம் உட்பட பல்வேறு உபகரணப் பொருட்களை வழங்கியுள்ளது லெஜென்டாரி ரைடர்ஸ் மலேசியா கிளப்.
வணக்கம் மலேசியா செய்தி மூலம் Legendary Riders Malaysia Club குழுவினரை பற்றி தெரிந்து, அவர்கள் உதவியை நாடியதாக தலைமை ஆசிரியர் மஞ்சுளா சாம் கூறியுள்ள நிலையில் கிடைக்கப்பெற்ற இந்த உதவி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
அதே சமயத்தில், தாமான் தான் ஸ்ரீ மாணிக்கவாசகத்தில் ருக்குன் தெத்தாங்க மண்டபத்தில் செயல்பட்டுவரும் அந்த பாலர் பள்ளியைச் சேர்ந்த வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள், பாட புத்தகங்கள், கலர் பென்சில்கள், கலர் பிரிண்டர் ஆகியவையும் ரைடர்ஸ் கிளப் வழங்கியது.
3 ஆசிரியர்கள் 25 மாணவர்களை கொண்ட இந்த பள்ளிக்கு சமுதாய தலைவர்கள் மற்றும் Legendary Riders Malaysia Club அமைப்பும் பல முறை உதவியதாகவும் அதற்கு நன்றியையும் தலைமையாசிரியர் தெரிவித்துக் கொண்டார்