Latestஉலகம்

ஹைதராபாத் சாலைக்கு அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் பெயர்: எதிர்ப்பு தெரிவித்த BJP

ஹைதராபாத், டிசம்பர் 8 – தெலுங்கானாவின் (Telangana) முதலமைச்சர் ரெவன் ரெட்டி, ஹைதரபாத்தில் (Hyderabad) இருக்கும் முக்கிய சாலைக்கு அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் பெயரை வழங்குவதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே செல்லும் இந்த சாலைக்கு “Donald Trump Avenue” என பெயர் சூட்ட திட்டமிட்டுள்ளனர்.

அதே நேரத்தில், ஹைதராபாதை தொழில்நுட்ப மையமாக்கிய நிறுவனங்களின் பெயர்களையும் சாலைகளுக்கு வழங்க பரிந்துரைத்துள்ளனர். அதில் “Google Street”, “Microsoft Road”, “Wipro Junction” மற்றும் Ratan Tata எனும் பெயர்களும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பயணிகளுக்கு முன்மாதிரியாகவும், ஹைதராபாதின் உலகளாவிய மதிப்பை உயர்த்தவும் உதவும் என்று முதலமைச்சர் கூறினார்.

இந்நிலையில், BJP கட்சியினர் ஹைட்ரபாத் சாலைகளுக்குச் சரியான வரலாறு மற்றும் பொருள் கொண்ட பெயர்களைச் சூட்ட வேண்டுமென்று கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!