
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-15, 2 வாரங்களுக்கு முன் பூச்சோங், தாமான் மாவாரில் இந்தோனீசியப் பெண்ணைக் கொன்றதாக, வங்காளதேச கட்டுமானத் தொழிலாளி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மலிவு விலை ஹோட்டல் அறையில் 39 வயது Nurhayati-யைக் கொலைச் செய்ததாக, 23 வயது MD Shimul Babu மீது குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும், கொலைக்குற்றம் உயர் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் வருவதால், சந்தேக நபரிடமிருந்து வாக்குமூலம் பதிவுச் செய்யப்படவில்லை.
இவ்வேளையில், முறையான பயணப் பத்திரமின்றி மலேசியாவுக்குள் நுழைந்ததாக அவ்விளைஞன் மீது மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
எனினும் அதனை மறுத்து அவன் விசாரணைக் கோரினான்.
ஜனவரி 1-ம் தேதி Nurhayati-யின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, புக்கிட் பூச்சோங்கில் இரு வெளிநாட்டு ஆடவர்கள் கைதாகினர்.
இதையடுத்து முதன்மை சந்தேக நபரான இந்த வங்காளதேச ஆடவன் கைதானான்.
பொறாமையின் காரணமாக அப்பெண்ணைக் கொலைச் செய்ததை, அவன் விசாரணையில் ஒப்புக் கொண்டான்.