ரவாங், செப்டம்பர் -29 – நாட்டின் முன்னணி சட்டி சோறு உணவகமான கார சாரம் அடுத்த வருடத்துக்குள் நாடு முழுவதும் 25-ந்திலிருந்து 30 கிளைகளைத் திறக்க இலக்குக் கொண்டுள்ளது.
இவ்வருடத்தோடு 18 கிளைகளைத் திறந்திருப்பதாக கார சாரம் உணவகத்தின் தலைமை நிர்வாகி (GM) ஜெகன் தெரிவித்தார்.
மூன்றாவது கிளையான ரவாங் கார சாரம் உணவகத்தின் மூன்றாமாண்டு கொண்டாட்டத்தின்போது அவர் இவ்வாறு பேசினார்.
2021-ல் திறக்கப்பட்ட இந்த ரவாங் கார சாரம் கிளைக்கு புத்துயிரூட்டி புதிய பரிணாமத்தில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் திருப்தியளிக்கும் வகையில் மேம்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
கார சாரம் உணவகம், நாட்டின் முதல் இந்திய drive-thru உணவகத்தை பினாங்கில் திறந்திருக்கும் தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் புதுவித அனுபவத்தை அளிக்கும் வகையில், பொட்டலம் பிரியாணி, சைவத்தில் சில பல புதிய அம்சங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
எனவே, கார சார உணவகத்துக்கு மக்கள் தொடர்ந்து தங்களின் நல்லாதரவை வழங்கி வர வேண்டும் என ஜெகன் கேட்டுக் கொண்டார்.