
கோலாலம்பூர், ஏப் 22 – அடுத்த ஆண்டு புதிய பள்ளி தவணை தொடங்கும்போது ஜாலூர் ஜெமிலாங் பேட்ஜ் பதிக்கப்பட்ட சீருடைகளை தயாரிக்கும்படி பள்ளி சீருடை உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவர். கூடுதல் செலவுகள் இல்லாமல் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் ஒருமித்த குழுவின் தலைவரும், இணைப் பேராசிரியருமான டத்தோ டாக்டர் முகமட் அலி ஹசான்
( Mohamad Ali Hasan ) கூறினார்.
ஜாலூர் ஜெமிலாங் பேட்ஜை பள்ளி சீருடையில், குறிப்பாக தொடக்கப்பள்ளி மற்றும் மழலையர் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து அச்சிடலாம் அல்லது தைக்கலாம் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் , மலேசிய கல்வி அமைச்சின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேசிய கொடியின் பேட்ஜை பெயர் அடையாளம்போல அணிந்துகொள்வதற்கு வாய்ப்பு வழங்கலாம் என்றும் முகமட் அலி தெரிவித்தார்.
பள்ளிக்கு வெளியே அல்லது உள்ளே நடைபெறும் நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பேட்ஜைப் பயன்படுத்தப் பழகுவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது என அவர் கூறினார்.
மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கல்வி அமைச்சு இரண்டு பேட்ஜ்களை இலவசமாக வழங்க வேண்டுமென முகமட் அலி பரிந்துரைத்தார்.
ஜாலுர் கெமிலாங் பேட்ஜை பள்ளி மாணவர்கள் சீருடையில் அணிவது பாதுகாப்பாக இருக்காது என்பதோடு , அந்த பேட்ஜ் முனை கூர்மையயாக இருப்பதால் அதை எடுக்க மறந்துவிட்டால் சீருடைக்கு பாதிப்பு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் இதற்கு முன் பதிவுகள் வெளியாகின