
வாஷிங்டன், மார்ச்-8 – அணு ஆயுதங்களைத் தயாரிப்பதிலிருந்து ஈரானைத் தடுக்கும் முயற்சியில் அந்நாட்டின் உயர்மட்டத் தலைவரை அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
Ayatollah Khamenei-க்கு அது குறித்து தாம் கடிதம் எழுதியிருப்பதை, அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
வியாழக்கிழமை அனுப்பப்பட்ட அக்கடிதத்தில், இராணுவ நடவடிக்கையைக் காட்டிலும் அரச தந்திர அணுகுமுறையின் அவசியத்தை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அது ஈரானுக்கு தான் நல்லது.
அதை விடுத்து பிடிவாதம் காட்டினால், நாங்கள் ‘மாற்று நடவடிக்கையில்’ இறங்க வேண்டி வரும் என டிரம்ப் சூசகமாகக் கூறினார்.
ஈரான் மீதான டிரம்பின் நிலைப்பாடுகள் கலவையாக இருப்பதையே இது காட்டுகிறது.
ஒரு பக்கம் தெஹ்ரான் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறார், மறுபக்கம் அதன் அதிபரை பேச்சுவாத்தைக்கு அழைக்கிறார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து 2018-ல் விலகிக் கொண்ட அமெரிக்கா, கடுமையானத் தடைகளை விதித்து, ஈரானை தூதர முறையில் ஒதுக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.