Latestஉலகம்

அணு ஆயுதங்களைச் சுமந்துச் செல்லும் இந்தியாவின் Agni-5 ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி, ஆகஸ்ட்-21 – அணு ஆயுதங்களைச் சுமந்துச் செல்லும் இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையான Agni-5-யை, இந்தியா வெற்றிகரமாக சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் அது நடத்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சு தெரிவித்தது.

தொழில்நுட்ப ரீதியிலிலும் செயல்பாட்டு ரீதியிலும் ஏவுகணை சிறப்பாக செயல்படுவதாக அது கூறியது.

அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் படைத்தது இந்த Agni-5 ஏவுகணை.

கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை, உலகின் அதிவேக ஏவுகணைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் திறனை Agni-5 கொண்டதால், இந்திய பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் வலிமையாக இது பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!