
வாஷிங்டன், செப் 20 – அதிபர் டோனல்ட் டிரம்ப் மற்றும் அவரது துணைவியார் மெலினா (Melania ) பயணம் செய்த ஹெலிகாப்டர் கட்டாயமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Chequersசிலிருந்து லண்டனின் Stansted விமான நிலையத்திற்கு பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது அதிபரின் அந்த ஹெலிகாப்டர் Hydraulic கோளாறு பிரச்னையை எதிர்நோக்கியது.
இதனால் பிரிட்டனுக்கு வரலாற்றுப்பூர்வமான இரண்டாவது அரசாங்க வருகையை மேற்கொண்ட டிரம்ப் திட்டமிட்ட நேரத்தைவிட 20 நிமிடம் தாமதாக சென்றடைந்தார்.
ஹெலிகாப்டர் லூடன் ( Luton ) விமான நிலையத்தில் தரையிறங்கியதாகத் தெரிகிறது.
அங்கு அதிபர் டிரம்ப்பும் முதல் பெண்மணியும் இரண்டாவது ஆதரவு ஹெலிகாப்டருக்கு மாற்றப்பட்டனர் என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் ( Karoline Leavitt ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
ஒரு சிறிய ஹைட்ராலிக் பிரச்னை காரணமாக, மிகுந்த எச்சரிக்கையுடனும், ஹெலிகாப்டர் ஓட்டுனர்கள் ஸ்டான்ஸ்டெட் ( Stansted ) விமான நிலையத்தை அடைவதற்கு முன்பு உள்ளூர் விமான நிலையத்தில் தரையிறங்கினர்.
அதன் பின் அதிபரும் அவரது துணைவியாரும் பாதுகாப்பான ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டனர்.
பிரிட்டனுக்கான அதிகாரப்பூர்வ வருகையை முடித்துக்கொண்டு டிரம்ப்பும் அவரது துணைவியாரும் அமெரிக்க அதிபருக்கான AirForce One விமானத்தில் ஏறி தாயகம் திரும்பினர்.