Latest
அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் தங்கம் வென்ற ஜோகூரைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஹேஷ்வந்த்

கோலாலாம்பூர், ஆகஸ்ட்-15 – ஜோகூர் கோத்தா மாசாய் Qdees பாலர் பள்ளி மாணவன் ஹேஷ்வந்த் சிவபிரகாஷ், வெறும் ஐந்தே வயதில் அனைத்துலக அளவிலான அறிவியல் புத்தாக்கப் போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
ECO FRIENDLY PAPER SOAP எனும் தலைப்பில் புத்தாக்கப் படைப்பினைப் படைத்ததற்காக, ஆகஸ்ட் 9-ஆம் தேதி கோலாலம்பூர் IYC அரங்கில் ஹேஷ்வந்த இவ்விருதினைப் பெற்றார்.
இவ்வாண்டு விருது பெற்றவர்களில் ஆக இளையவர் இவரே.
5 வயதில் அரங்கம் அதிரும் பலத்தக் கரகோஷத்தோடு ஹேஸ்வந்த விருது வாங்கியது குறித்து பெற்றோர் சிவபிரகாஷ் – கோகிலவாணி பெருமிதம் தெரிவித்தனர்.
ஹேஷ்வந்தின் அனைத்துலக அங்கீகாரத்திற்கு வழிவகுத்த QDEES KOTA MASAI தலைமையாசிரியை விஜயா மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும், பெற்றோர் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.