
டப்ளின், நவம்பர்-15, கிறிஸ்டியானோ ரொனால்டோ, அனைத்துலக ஆட்டங்களில் முதன் முறையாக சிவப்பு அட்டைப் பெற்றுள்ளார்.
டப்ளினில் (Dublin) நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் உபசரணை அணியான அயர்லாந்திடம் போர்ச்சுகல் 0-2 என தோல்வி கண்ட ஆட்டத்தில் அவருக்கு சிவட்டை அட்டை வழங்கப்பட்டது.
61-ஆவது நிமிடத்தில் ரொனால்டோ, எதிரணி வீரரை முட்டியதால் முதலில் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது; பின்னர் VAR எனப்படும் வீடியோ தொழில்நுட்ப பரிசீலனையில் அது சிவப்பு அட்டையாக மாற்றப்பட்டது.
இதனால் ரொனால்டோ, நாளை ஞாயிற்றுக்கிழமை அர்மேனியாவுக்கு எதிரான தகுதிச் சுற்று ஆட்டத்தில் விளையாட முடியாது.
தகுதிச் சுற்றின் F குழுவில் போர்ச்சுகல் தற்போது ஹங்கேரியை (Hungary) விட 2 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது; நாளை வெற்றி பெற்றால் அது நேரடியாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும்.
ஆனால் சிவப்பு அட்டையால் ஆட்டத் தடை நீட்டிக்கப்பட்டால், ரொனால்டோ 2026 உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தைத் தவறவிடக்கூடும்.
இது ரொனால்டோ மட்டுமின்றி, அவர் எப்படியாவது உலகக் கிண்ணத்தை வென்று விட வேண்டுமென உலகம் முழுவதும் பெரும் கனவுகளோடு இருக்கும் அவரின் கோடிக்கணக்கான இரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.



