Latestமலேசியா

அனைத்துலக விமான நிலையத்தில் உரிமம் பெறாத கார் வாடகை சேவைகளை வழங்கும் இரண்டு ஆடவர்கள் கைது

செப்பாங், நவ 20 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான
(KLIA)வில் உரிமம் பெறாத கார் வாடகை சேவைகளை வழங்கும் இரண்டு ஆடவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையின் விளைவாக உரிமம் பெறாத அல்லது சட்டவிரோத கார் வாடகை சேவைகளை வழங்கும் முதல் நபர் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் சாலை போக்குவரத்துத்துறை இயக்குநர் அஸ்ரின் பொர்ஹான் ( Azrin Borhan ) தெரிவித்தார். KLIA விலிருந்து சிலாங்கூர் Bandar Puchong Utamaவிற்கு செல்லும் சீனப் பயணியை 60 ரிங்கிட் வாடகை கட்டணத்தில் ஏற்றிச் செல்வதற்கு முன்வந்தபோது பெரோடுவா அல்சா கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதோடு அக்காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

உரிமம் பெறாத அல்லது சட்டவிரோத கார் வாடகை சேவைகளை வழங்கியதற்காக KLIA 2ஆவது முனையத்தில் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டதோடு அவரது Toyota Alphard வாகனமும் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திலிருந்து கோலாலம்பூரிலுள்ள ஹோட்டலுக்கு இரு பயணிகளை ஏற்ற முன்வந்ததன் தொர்பில் அந்த கார் ஓட்டுனர் கைது செய்யட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!