Latestமலேசியா

புத்ரா ஹைய்ட்ஸ் தீ விபத்து; Massimo ரொட்டித் தயாரிப்பும் பாதிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல்-4- பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்புச் சம்பவத்தால், Massimo ரொட்டித் தயாரிப்பு நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரொட்டித் தயாரிக்கும் தொழிற்சாலைக்கான LNG எரிவாயு தருவிப்பு இடையூறைச் சந்தித்துள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே இன்று முதல் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை, சந்தையில் Massimo ரொட்டிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம்.

என்ற போதும் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது ஆகக் கடைசி தகவல்கள் வழங்கப்படுமென, The Italian Baker Sdn Bhd நிறுவனம் அறிக்கையொன்றில் கூறியது.

செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த அவ்வெடிப்பில் நூற்றுக்கணக்கில் வீடுகள் சேதமடைந்து ஏராளமானோர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!