Latestமலேசியா

அமர்ந்த வாக்கில் அறையில் ஆடவர் இறந்து கிடந்தார்

கங்கார், அக் 7 – செரியாப் ,

ஜாலான் கங்கார் – அலோர் ஸ்டாரில் நேற்று கம்போங் அலோர் புலாயில் உள்ள தனது வீட்டில் உள்ள அறையில் தரையில் அமர்ந்த நிலையில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

இரவு மணி 9.40 அளவில் அந்த நபரின் உடலை அவரது அண்டை வீட்டுக்காரர் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து தங்களுக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் யுஷாரிபுதீன் முகமட் யூசோப் ( Yusharifuddin Mohd Yusof ) தெரிவித்தார்.

அவ்வீட்டிற்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள், அங்கிருந்த அறையின் கதவின் பின்னால் தரையில் அமர்ந்திருந்த 45 வயதுடைய நபரின் உடலைக் கண்டுபிடித்தனர்.

அந்த அறையிலும் உடலிலும் சோதனை செய்தபோது, ​குற்றவியல் கூறுகள் எதுவும் இல்லையென தெரிவிக்கப்பட்டது. மரணம் அடைந்த அந்த ஆடவர் தனது தாய் மற்றும் மாற்றுத் திறனாளியான மூத்த சகோதரியுடன் வசித்து வந்ததாக தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

இறந்தவரை கடைசியாக கடந்த வியாழக்கிழமை இரவு பார்த்தாக அண்டை வீட்டுக்காரர் தெரிவித்தார். அந்த ஆடவர் திடீர் மரணம் அடைந்ததாக வகைப்படுத்தப்பட்டது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!