
டாமான்சாரா, ஆகஸ்ட்-24 – கோத்தா டாமான்சாராவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 6-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து 3 வயது சிறுவன் மரணமடைந்துள்ளான்.
கடந்த வியாழக்கிழமை மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது.
நடைப்பாதையில் சிறுவன் விழுந்துகிடந்ததை கண்ட பொது மக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய 2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுவதாக, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் Shahrulnizam Ja’afar கூறினார்.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தால் விசாரணைக்கு வந்து உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.