
மினியாபோலீஸ், ஆகஸ்ட்-28 – அமெரிக்காவின் Minnesota மாநிலப் பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 10 வயதான 2 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் 14 பேர் மாணவர்கள் ஆவர்.
கல்தோலிக்கப் பள்ளியில் பிராத்தனை இருக்கைகளில் அமர்ந்து பிராத்தனை செய்யும் போது அவர்கள் சுடப்பட்டனர்.
துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஏந்திய சந்தேக நபர், தேவாலய ஜன்னல்கள் வழியாக போலீஸாரால் சுடப்பட்டு, பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மாண்டான்.
அந்தக் கொலையாளி 23 வயது Robin Westman என்ற இளைஞன் என அடையாளம் காணப்பட்டது.
கத்தோலிக்கர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் பயங்கரவாத நடவடிக்கையாக வகைப்படுத்தி இச்சம்பவத்தை போலீஸ் விசாரித்து வருகிறது.
இத்துப்பாக்கிச் சூட்டை கடுமையாகக் கண்டித்த அதிபர் டோனல்ட் ட்ரம்ப், மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சூரியன் மறையும் வரை இன்றொரு நாள் வெள்ளை மாளிகையிலும் அனத்து அரசாங்கக் கட்டடங்களிலும் அமெரிக்கக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றார்.