
புக்கிட் காயு ஹீத்தாம், ஜனவரி-10,
அமெரிக்கர் ஒருவர் உட்பட 9 வெளிநாட்டவர்கள், மலேசியாவுக்குள் நுழைவதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதர 8 பேரில் எழுவர் சீனாவிலிருந்து வந்த ஒரு குழுவினர் ஆவர்.
மேலுமொருவர் தாய்லாந்து பெண்ணாவார்.
புக்கிட் காயு ஹீத்தாம் எல்லையில் உள்ள குடிநுழைவு பரிசோதனை சாவடியில் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
அமெரிக்கப் பிரஜைக்கு, திரும்பிச் செல்லும் டிக்கெட் இல்லை; 7 சீனப் பிரஜைகளுக்கும் மலேசியா வருவதற்கான உருப்படியான காரணங்கள் இல்லை; தாய்லாந்து பெண்ணோ கருப்புப் பட்டியலில் உள்ளவர் என, AKPS எனப்படும் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் கூறியது.
அனைத்து 9 பேரும் வந்த வழியே தத்தம் நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல உத்தரவிடப்பட்டனர்.



