
வாஷிங்டன், மார்ச்-14 – ஈரானின் புதிய உச்சத் தலைவர் ஆயதொலா மொஜ்தபா கமேனியின் தலைக்கு, அமெரிக்கா 10 மில்லியன் டாலர் சன்மானத்தை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அவரைப் பிடிக்க அல்லது அவரைப் பற்றிய தகவலை வழங்குபவர்களுக்கு அந்த பரிசுத் தொகை வழங்கப்படும் என, அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியது.
அண்மையில் அமெரிக்க வான் தாக்குதல்களில் தனது தந்தை ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா பொறுப்பேற்றார்.
ஆனால் அவர் நீண்டகாலம் நீடிக்க மாட்டார் என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், இந்த 10 மில்லியன் டாலர் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அலி கமேனியைப் போன்றே அவரது மகனும் அமெரிக்காவுக்கு அடிபணியாதவர் என்பதால், அடுத்தக் குறியாக அவரின் ‘கதையையும் முடிக்க’ வாஷிங்டன் திட்டம் தீட்டி வருவதையே இது காட்டுகிறது.
மொஜ்தபாவுடன், ஈரானிய உள்துறை அமைச்சர் Eskandar Momeni, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைச்சர் Esmail Khatib, உள்ளிட்ட 10 பேர் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளனர்.



