Latestமலேசியா

அமெரிக்காவில், காணாமல் போன செல்லப்பிராணி; ‘வரிக்குதிரை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டென்னசி, அமெரிக்கா, ஜூன் 10 – டென்னசியில் ஒரு வாரத்திற்கும் மேலாக சுற்றித் திரிந்து, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காணாமல் போன செல்லப்பிராணியான வரிக்குதிரை, ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே 30-ஆம் தேதியன்று, ‘எட்’ எனப்படும் அந்த வரிக்குதிரை அமெரிக்கா கிறிஸ்டியானா பகுதியை வந்தடைந்ததாக அமெரிக்க ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பின்னர் அதன் உரிமையாளர் அடுத்த நாளே அதைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளதாக அறியப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே, காணாமல் போன வரிக்குதிரை தொடர்பான ‘மீம்ஸ்க்களை’ வலைத்தளத்தில் அதிகம் காண முடிந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!