டெக்சஸ், செப்டம்பர் -22, அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் பரோலில் வெளியான சிறைக்கைதியை ரோபோ கோப் (Robocop) எனும் இயந்திர மனிதன் மடக்கிப் பிடித்த வீடியோ வைரலாகியுள்ளது.
ஹோட்டல் அறையொன்றின் வாசலில் வந்து நின்ற ரோபோ கோப்பை, உள்ளிருந்த கைதி கவனித்து விட்டான்; அதனிடமிருந்து தப்பிக்க வெள்ளை நிற மெத்தைத் துணியை அதன் மீது போட்டு மூடினான்.
பிறகு வீட்டுக்குள் சென்றவன், ரோபோ கோப்பின் கண்களில் மண்ணைத் தூவுவதாக நினைத்துக் கொண்டு, ஜன்னல் வழியாக குதித்து தப்பிக்க முயன்றான்.
ஆனால் அவனை விட ‘புத்திசாலியான’ ரோபோ, சட்டென அவன் மீது மிளகுப் பொடியை (pepper spray) தெளித்தது.
அவன் சுதாகரிப்பதற்குள் அவன் மீதே ரோபோ ஏறி விட்டது.
இதையடுத்து அங்கு காத்திருந்த போலீசார் விரைந்து வந்து அவனைக் கைதுச் செய்து கொண்டு சென்றனர்.
நீதிமன்ற அனுமதியோடு பரோலில் வெளியான அக்கைதி, பரோல் விதிமுறைகளை மீறியதால் கைதானான்.