
வாஷிங்டன், ஏப்ரல்-30, அமெரிக்காவின் வாஷிங்டனில் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் ஒருவர், தனது மனைவியையும் மகன்களில் ஒருவரையும் சுட்டுக் கொன்று விட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து மாண்டார்.
ஏப்ரல் 24-ல் நிகழ்ந்த இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்தம்பதியின் மற்றொரு மகன் சம்பவத்தின் போது வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினான்.
கொலையாளி 57 வயது Harshavardhana S Kikkeri என அடையாளம் கூறப்பட்டது.
கொல்லப்பட்டது, அவரின் 44 வயது மனைவி Shwetha Panyam மற்றும் 14 வயது மகன் என தெரிவிக்கப்பட்டது.
உயிர் தப்பிய மகனை போலீஸ்காரர்கள் அழைத்து வருவதையும் அவனை தேற்றுவதையும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
எனினும் 2 சிறுவர்களின் அடையாளங்களும் வெளியிடப்படவில்லை.
கட்டிய மனைவியையும் பெற்றப் பிள்ளையையும் அவ்வாடவர் சுட்டுக் கொல்லும் அளவுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை.
இந்நிலையில் உள்ளூர் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அக்குடும்பத்தார் பழகுவதற்கு இனியவர்கள்; ஆனால் பொதுவில் சற்று ஒதுங்கியே இருப்பார்கள் என அண்டை வீட்டார் கூறினர்.
Harshavardhana, கர்நாடகா மாநிலத்தின் மைசூருவில் பிரபல ரோபோட்டிக் நிறுவனமான HoloWorld-டின் CEO ஆவார்.
மனைவி அந்நிறுனத்தின் இணைத் தோற்றுனர் என்பது குறிப்பிடத்தக்கது