
வாஷிங்டன், ஜன 6 – வெனுசுவலாவில் நள்ளிரவு வேளையில் அமெரிக்க மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் தங்களது இல்லத்திலிருந்து கைது செய்யப்பட்ட அந்நாட்டின் முன்னாள் அதிபர் நிக்லோஸ் மடுரோவும் ( Nicolas Maduro) அவரது மனைவியும் முதல் முறையாக அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டைச் சேர்ந்த தலைவர் ஒருவர் மீது அமெரிக்க அரசாங்கம் கொண்டுவந்த குற்றச்சாட்டு மீதான விசாரணையின் தொடக்கமாக Manhattan நீதிமன்றத்தில் Maduro நிறுத்தப்பட்டார்.
என் நாட்டிலிருந்து நான் கடத்தப்பட்டேன் என்பதோடு , தன்னை கைது செய்ததற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
டிரம்ப் நிர்வாகம் தன்னை அதிகாரத்திலிருந்து நீக்குவதை நியாயப்படுத்த பயன்படுத்திய அமெரிக்க அரசாங்கம் கொண்டுவந்த போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் தாம் குற்றமற்றவர் எனக்கூறியதோடு என் நாட்டின் அதிபர் தாம் என்றும் Maduro அறிவித்தார்.
அவரது உரையை நீதிபதி இடைமறித்து நிறுத்தும்படி உத்தரவிடுவதற்கு முன் “நான் கைது செய்யப்பட்டேன், என்று Spain மொழியில் Maduro கூறினார்.
குற்றச்சாட்டுகளுக்கு உங்களது வாதம் என்ன என்று பின்னர் நீதிபதி கேட்டபோது, “நான் நிரபராதி. நான் குற்றவாளி அல்ல.
நான் ஒரு ஒழுக்கமான மனிதன், என் நாட்டின் அதிபர் என்று Maduro மறுமொழி தெரிவித்தார். சனிக்கிழமை நள்ளிரவுவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்டது முதல் Brooklyn சிறையில் வைக்கப்பட்டிருந்த Maduroவும் அவரது மனைவியும் கடுமையான பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை நிறுத்தப்பட்டனர்.



