வாஷிங்டன், நவம்பர்-13- அமெரிக்காவில் 4 மாநிலங்களில் கடந்த சனிக்கிழமை இரவு வானில் பட்டொளி வீசிய தீப்பந்துகளைப் பார்த்ததாக பொது மக்கள் கூறியுள்ளனர்.
Colorado, Texas, Kansas, Oklahoma மாநிலங்களை அது கடந்துசென்றதை நேரில் கண்டதாக, அமெரிக்க விண்கல் சங்கத்திற்கு 36 அழைப்புகள் வந்தன.
அந்த தீப்பந்துகள் சிறு சிறு துண்டுகளாக வானில் வெடித்துச் சிதறியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
Oklahoma மாநிலத்தில் அதிகம் தென்பட்ட நிலையில், பலரும் அதை meteor எனப்படும் விண்கல் என்றே நினைத்திருந்தனர்.
ஆனால், அது உண்மையில் இலோன் மாஸ்க்கின் Space X நிறுவனத்தின் Starlink துணைக்கோளமாக இருக்கலாமென, ஹார்வர்ட் பல்கலைக்கழக வானியலாளர் Jonathan McDowell கூறுகிறார்.
Starlink-4682 என்ற பெயரிலான அத்துணைக்கோளம், பூமியின் வளிமண்டலத்தினுள் மீண்டும் நுழையும் போநு வெடித்திருக்கலாமென தனது X தளத்தில் McDowell பதிவிட்டுள்ளார்.