Latestமலேசியா

“அம்மா… அப்பா காயமடைந்துள்ளார்”_ பலியான மோட்டார் சைக்கிளோட்டியின் 9 வயது மகனது துயரக் குரல்

கிள்ளான், மார்ச்-31,“அம்மா பாருங்கள்… அப்பா காயமடைந்துள்ளார்…” — 9 வயது Muhammad Aqif Amsyar, தன் தந்தை விபத்தில் சுழன்று உயிரற்ற உடலாய் விழும் காட்சியை வீடியோவில் பார்த்தபோது சொன்ன வார்த்தை அது.

p-hailing ஓட்டுநரான 33 வயது Amirul Hafiz Omar அண்மையில் சிலாங்கூர், கிள்ளானில் நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் உயிரிழந்தார்.

மதுபானம் மற்றும் போதைப்பொருள் மயக்கத்தில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் காரோட்டி, பல வாகனங்களை முந்தி எதிர்திசையில் நுழைந்து Amirul-லின் மோட்டார் சைக்கிளை மோதினார்.

அதில், Amirul தூக்கி வீசப்பட்டு சுமார் 10 முறை சுழன்று, மற்றொரு வாகனத்தின் மேல் விழுந்து உயிரிழந்தார்.

இந்த வீடியோவைப் பார்த்து மகன் அதிர்ச்சியடைந்தாலும், நடந்தவற்றை புரிந்துகொள்ளும் வயதில் அவனில்லை என, Amirul-லின் மனைவி Nor Nadia Abdul Majid வேதனையுடன் கூறினார்.

குடும்பத்திற்கான வருமானம் தேடி ஒன்றுக்கு இரண்டு வேலைகளை செய்து வந்துள்ளார் Amirul.

இப்படி குடும்பத்தின் ஒரே நிதி ஆதாரமாக இருந்த கணவர் மறைந்திருப்பதால், 3 பிள்ளைகளுடன் தனிமரமாய் நிற்கும் Nor Nadia-வுக்கு அவர்களின் எதிர்காலம், படிப்பு குறித்து பெரும் கவலை.

இந்நிலையில், Amirul-லின் மரணம் தொடர்பான சட்ட நடவடிக்கைக்கு, வழக்கறிஞர் ஒருவர் அக்குடும்பத்துக்கு உதவ முன்வந்துள்ளார்.

அன்புக் கணவரின் துர்மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமெனக் கூறிய Nor Nadia, தம்மைப் போல மற்றவர்களும் இப்படி குடும்ப உறுப்பினர்களை இழக்கக் கூடாது என்றார்.

விபத்தை ஏற்படுத்திய 20 வயது இளைஞர் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!