
கோலாலம்பூர், ஆக 21 – இதற்கு முன் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்த பெரிக்காத்தான் நேசனல் தலைவர் முஹிடின் யாசினும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அரசாங்கம் கொடுமையாக இருப்பதோடு கிளந்தானுக்கு ஒதுக்கீடு வழங்கவில்லை என்பது உட்பட அவர் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்.
குறிப்பிட்ட மூன்று தகவல் ஆதாரங்கள் தவறானவையா அல்லது வேறுவிதமா என்பதைத் தீர்மானிக்க மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (MCMC) விசாரணையின் முடிவுகளுக்காக தாம் காத்திருப்பதாக கடந்த வாரம் அன்வார் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அதே வேளையில் அந்த ஆதாரம் உண்மையானது அல்ல மற்றும் தான் தவறு செய்துவிட்டதாக MCMC உறுதிப்படுத்தினால் முஹிடினிடம் மன்னிப்பு கேட்பததில் தனக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லையென்றும் அன்வார் கூறினார்.
வெளிநாட்டினர் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்திருந்த போதிலும் அவர்கள் மீது அரசாங்கம் சுமையை ஏற்படுத்தியதாக பெர்சத்துவின் தலைவருமான முஹிடின் கேள்வி எழுப்பியிருந்ததாக அன்வார் கூறியிருந்தார்.
மின்சாரம் மற்றும் RON95 பெட்ரோலுக்கான இலக்கு மானியங்களை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும், இதனால் நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் அதே வேளையில் மக்களுக்கு தொடர்ந்து உதவ முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.