
மஞ்சோங், டிசம்பர் 8 – பேராக், சித்தியவான், தாமான் செந்தோசா 2-ல் உள்ள கேளிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், வெளிநாட்டவர்கள் உட்பட 70 பேர் கைதாகியுள்ளனர்.
விடியற்காலை 3 மணிக்கு நடைபெற்ற அச்சோதனையில் 16 பெண்கள் உட்பட 54 பேர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
கைதான 13 உள்ளூர் ஆடவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அருகிலுள்ள மற்றொரு மையத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக மஞ்சோங் போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஹஸ்புல்லா அப்துல் ரகுமான் (Hasbullah Abd Rahman) கூறினார்.
அங்கு தோளில் குறுக்கே மாட்டும் பைகளில் 31 பிளாஸ்டிக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 545 கிராம் MDMA வகைப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
1.3 கிராம் எடையிலான 5 erimin 5 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.
பறிமுதலான போதைப்பொருளின் மொத்த மதிப்பு 91,125 ரிங்கிட் என ஹஸ்புல்லா சொன்னார்.
Honda Civic காரொன்றும் சீல் வைக்கப்பட்டது.
கைதான அனைவரும் 3 முதல் 7 நாட்களுக்கு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.