
கோலாலம்பூர், மார்ச் 13 – சமயத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் இன்ஸ்டாகிராம்-மில் வெளியிட்ட வீடியோவில் அருண் துரைசாமி மக்களை தூண்டிவிட முயன்றதாக செய்யப்பட்ட புகாருக்கு எதிராக போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நேற்று பினாங்கின் பத்து காவான் பகுதியிலிருந்து ஒரு புகார் பெறப்பட்டதாக தேசிய போலீஸ் தலைவர், டான் ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் கூறினார்.
அந்த புகாரில், வாட்ஸ்அப்பில் பரவிய வீடியோவில் அருண் துரைசாமி முன்வைத்த கருத்துகள் மக்களை தூண்டும் வகையிலும் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான வகையிலும் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய பாதுகாப்பையும் மலேசிய பிரதமரையும் குறித்து அந்த வீடியோவில் பேசப்பட்டிருந்ததாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சமய சொற்பொழிவாளர் ஜம்ரி வினோத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அவரும் மலேசிய இந்து ஆகம அணி அமைப்பும் மற்றும்
இந்து சமூதாயத்தினரும் வீதி போராட்டத்தில் இறங்கப் போவதாக அருண் துரைசாமி பேசியதாக புகார்தாரர் கூறியதாக ரசாருடின் தெரிவித்தார்.