
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-2,
பினாங்கு, கெபுன் பூங்கா, அருள்மிகு ஸ்ரீ கணேஷர் ஆலயத்தின் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்காக, நிதியமைச்சு சார்பில் RM100,000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
தண்ணீர் மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிதி ஒப்படைப்புச் சடங்கில், நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் (Lim Hui Ying) நேரில் பங்கேற்றார்.
அவர் தமதுரையில், மடானி அரசாங்கத்தின் “ஒற்றுமை, இணக்கம் மற்றும் மதச்சார்பற்ற சமூகம்” என்ற கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தொடர்ந்து ஆதரவை வழங்கி, மதம், பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமை சிறக்க அரசாங்கம் உறுதியோடு செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், DAP மூத்தத் தலைவர் தான் ஸ்ரீ லிம் கிட் சியாங், ஆலோசகர் லிம் குவான் எங், புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர். அருணாசலம், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அருள்மிகு ஸ்ரீ கணேஷர் கோவிலின் கும்பாபிஷேகம் நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.



