Latestமலேசியா

அறமும் ஒளியும் கலந்த விழா; B40 இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றிய UUM

சிந்தோக், நவம்பர்-7,

தீபாவளியின் உண்மையான அர்த்தமே ஒளியையும், அன்பையும் பரப்புவதாகும்; இதையே செயலில் காட்டியுள்ளனர் கெடா, UUM எனப்படும் வட மலேசியப் பல்கலைக்கழக இந்திய மாணவர்கள்.

‘அறம் செய் தீபாவளி 2025’ என்ற தன்னார்வத் திட்டத்தை, மாணவர் பிரதிநிதித்துவ மன்றத்தினர் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தினர்.

இத்திட்டத்தின் நோக்கம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய B40 இந்திய மாணவர்களுக்கு ஆதரவளித்து, தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்வதாகும்.

முதல் கட்டமாக, சங்லூன் தமிழ்ப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கல்வி உதவிகள் வழங்கப்பட்டன.

இரண்டாவது கட்டமாக, UUM-மில் B40 மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சரின் பத்திரிகைச் செயலாளரும் ம.இ.கா புத்ரா பிரிவு தலைவருமான Dr Shatesh Kumar Sangar கலந்துகொண்டார்.

மாணவர்கள் தாங்களே நிதி திரட்டி, சமூக நலனுக்காக செயல்பட்ட இந்த முயற்சி, இளைய தலைமுறையின் ஒளியாக திகழ்கிறது.

எனவே, “அன்பும் அறமும் கலந்த இளைஞர்களின் இதய ஒளியே உண்மையான தீபாவளி” என மாணவர் பிரதிநிதி ஷர்வின் தங்கராஜ் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!