Latestமலேசியா

அலோர் காஜாவில் குழந்தையைக் கொடூரமாகக் கொலைச் செய்ததாக குழந்தைப் பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

அலோர் காஜா, செப்டம்பர்-13 – 8 மாத ஆண் குழந்தையை கடந்த வாரம் கொலைச் செய்ததாக, குழந்தைப் பராமரிப்பாளர் இன்று மலாக்கா, அலோர் காஜா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

கொலைக் குற்றம் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் வருவதால், 34 வயது அப்பெண்ணிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.

செப்டம்பர் 6-ம் தேதி, Taman Kelemak Utama, Jalan Kelemat Utama 3-ல் உள்ள குழந்தைப் பராமரிப்பு மையத்தில் Muhammad Al Fateh Amri Mohd Fikry Amri எனும் குழந்தையைக் கொலைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 குழந்தைகளுக்குத் தாயான Nor Afifah Abdullah Shuhaimi-க்கு, அதிகபட்சமாக மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

மரண தண்டனையிலிருந்து தப்பினால், 12-க்கும் குறையாத பிரம்படிகளும் விதிக்க குற்றவியல் சட்டத்தின் 302-வது சட்டம் வகை செய்கிறது.

கொலைக் குற்றம் என்பதால், அப்பெண்ணுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

நவம்பர் 13-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.

துணியால் இறுகக் சுற்றி, வாயில் பால் புட்டியை திணித்து, முகத்தை தலகாணியால் அழுத்தி சொல்ல முடியாத அளவுக்கு துன்புறுத்தி குழந்தையை அப்பெண் கொலைச் செய்ததாக முன்னதாக செய்திகள் வெளியாகின.

இறந்துப் போனது, 13 ஆண்டுகள் தவமிருந்துப் பெற்ற குழந்தையென அதன் பெற்றோர் வேதனையுடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!