
கோலாலம்பூர், ஜூலை-26- காஜாங், பண்டார் புக்கிட் மக்கோத்தாவில் கட்டுமானப் பொருட்களின் சேமிப்புக் கிடங்கில் நடத்தப்பட்ட அமுலாக்கச் சோதனையில், 33 கள்ளக்குடியேறிகள் கைதாகினர்.
பொது மக்களின் புகாரைத் தொடர்ந்து 2 வாரங்களாக வேவு பார்த்து, நேற்று அதிகாலை 2 மணிக்கு குடிநுழைவுத் துறை அதிரடியில் இறங்கியது.
சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பிலான அந்த சட்டவிரோதக் குடியேற்றத்தில், 4 உள்நாட்டினர் உட்பட 150 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.
அவர்களில், வங்காளதேசம், இந்தோனேசியா, பாகிஸ்தான், நேப்பாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 33 வெளிநாட்டினர் பல்வேறுக் குடிநுழைவுக் குற்றங்களுக்காக கைதாகினர்.
PLKS எனும் தற்காலிக வேலை பயண பெர்மிட்டை வைத்துக் கொண்டு, கட்டுமானத் தொழிலாளர்கள் போல் அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து வந்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது.
அக்குடியேற்றத்தில் தங்கியிருந்த ஓர் உள்ளூர் பெண்ணுக்கும் விசாரணைக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கைதானக் கள்ளக்குடியேறிகள் மேல் விசாரணைக்காக KLIA குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.