
கோலாலம்பூர், செப்டம்பர் 4 – வரும் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் முழு சந்திர கிரகணம் நிகழும் என்று மலேசிய விண்வெளி நிறுவனமான MYSA தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மலேசிய நேரம் இரவு 12.26 க்கு பகுதி கிரகணம் ஆரம்பமாகும் எனவும் முழுக் கிரகணம் 1.30 மணிக்கு தொடங்கி, 2.53 மணிக்கு நிறைவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கிரகணம் என்பது பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை நேர்கோட்டில் இருக்கும்போது, பூமியின் நிழல் சந்திரனை மூடும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தில் சிதறி சென்று சந்திரனை அடைவதால், அது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் தோன்றும் என்றும் இதனை பொதுவாக “Blood Moon’ என்று அழைப்பார்கள் என்றும் மலேசிய விண்வெளி நிறுவனமான கூறியிருக்கிறது.
இந்த முழுச் சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்தும் காண முடியும்.
மேலும் மலேசியாவில் இந்த அற்புத காட்சியினை நேரடியாகவும் அல்லது binoculars தொலைநோக்கி மூலமாகக் காணலாம்.