
ரவாங், மார்ச்-25- சிலாங்கூர், ரவாங் அங்குன் சிட்டியில் புதிதாக அமைந்துள்ள கிளினிக் செத்தியா கெமிலாங், வட்டார மக்களுக்கு தரமான பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.
முக அழகு சிகிச்சை முதல் மூட்டு வலி வரை, உங்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மிகச் சிறந்த தீர்வை இது வழங்குகிறது.
தலை முடி வளர உதவும் PRP எனப்படும் பிளாட்லெட் நிறைந்த பிளாஸ்மா சிகிச்சை, முழங்காலுக்கான ஜெல் மற்றும் PRP சிகிச்சை, நாட்பட்ட மூட்டு வலிக்கான நிவாரணம் ஆகியவை இந்த கிளினிக்கின் சிறப்பம்சமாகும்.
இது தவிர, ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்திற்கான பல்வேறு தோல் நிலைகளின் சிறப்பு மதிப்பீடு மற்றும் மேலாண்மைக்கான தோல் மருத்துவச் சிகிச்சைகளும் உண்டு.
புத்துணர்ச்சியூட்டும் நன்மைகளுடன் இளமையான சருமத்தை மீட்டெடுத்து சுருக்கங்களைக் குறைக்க உதவும், PRP முக சிகிச்சைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
கிளினிக்கின் நிர்வாக இயக்குநரான Dr சிவமுரளிதரன் 15 வருடங்களாக பொது மருத்துவராகப் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
தற்போது interventional pain management என்றழைக்கப்படும் பெரிய அறுவை சிகிச்சை இல்லாமல், குறைந்தபட்ச ஊடுருவும் தலையீட்டு வலி மேலாண்மையில் கவனம் செலுத்தி வருகிறார்.
முதுகு, நரம்பு மற்றும் மூட்டு வலிக்கு உள்ளிட்ட நாள்பட்ட வலிகளுக்கான மேலாண்மையைப் பயிற்சியை அவர் இந்தியாவில் பெற்றுள்ளார்.
இவர், நாடு முழுவதிலுமிருந்து மட்டுமல்லாமல் அண்டை நாடுகளிலிருந்து வரும் நோயாளிகளிகளுக்கும் சிகிச்சையளிக்கிறார்.
நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஊழியர்கள், பல்வேறு உபாதைகளுக்கான விரிவான சேவைகள், அதிநவீன மருத்துவ வசதிகள், வசதியான இடம் என மக்களின் தேவையறிந்து இந்த கிளினிக் செயல்பட்டு வருகிறது.
அண்மையில் கூட இக்கிளினிக்கில் மடானி சுகாதார பரிசோதனை இயக்கம் நடைபெற்றது.
மூட்டு வலியிலிருந்து கால் பாத வலி வரைக்குமான இலவச ultrasound பரிசோதனைகளும், முதலில் வந்த ஐவருக்கு இலவச இரத்த பரிசோதனையும், Brego Life நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் முட்டியில் ஜெல் செலுத்துவதும் என பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.
இங்கு, கால் முட்டி எலும்புகள் உரசும் போது ஏற்படும் வலியைக் குறைப்பதற்கான intra articular injection முறையின் மூலம் ஊசி மூலம் ஜெல் செலுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் உடனே எழுந்து நடக்கலாம் என Dr நிவாஷினி கூறினார்.
இதுவரை 80,000 நோயாளிகள் திருப்திகரமான சிகிச்சையைப் பெற்றுச் சென்றுள்ளனர்; 8,000 மூட்டு வலி சம்பவங்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டு, 5,000-க்கும் மேற்பட்டோருக்கு முடி வளருதல் சிகிச்சை வெற்றியளித்துள்ளது.
எனவே, தரமான வசதியான சிகிச்சைகளை நாடும் ரவாங் சுற்று வட்டார மக்கள் இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கிளினிக் திறந்திருக்கும்.