Latestமலேசியா

அழகு நட்சத்திரங்களுக்கு மகுடம் சூட்டிய Miss & Mr Keystone Malaysia 2026 அழகுராணி & அழகுராஜா போட்டி

அழகு நட்சத்திரங்களுக்கு மகுடம் சூட்டிய Miss & Mr Keystone Malaysia 2026 அழகுராணி & அழகுராஜா போட்டி

கோலாலாம்பூர், பிப்ரவரி-10,

Miss & Mr Keystone Malaysia 2026 அழகுராணி மற்றும் அழகுராஜா போட்டி அண்மையில் கோலாலாம்பூர் China Town-னில் உள்ள Signature International ஹோட்டலில் கோலாகலமாக நடந்தேறியது.

Keystone Individual Talents Academy மையத்தின் தலைமை செயலதிகாரியும், Grand Sea Malaysia 2026 போட்டியின் தேசிய இயக்குநருமான கலைமாமணி முருகன் ஏற்பாட்டில் மூன்றாவது ஆண்டாக இப்போட்டி நடத்தப்பட்டது.

அனைத்துலகப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவருமான முரு, தம்மைப் போலவே ஏராளமானோரை உருவாக்கும் நோக்கத்தில் இப்போட்டியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அவ்வகையில் சுமார் 250 பேர் பங்கேற்ற Miss & Mr Keystone Malaysia 2026 விழா, பிரகாசமும் அழகும் நிறைந்த இரவில் வெற்றியாளர்களுக்கு மகுடம் சூட்டியது.

சிறப்பு விருந்தினராக டத்தோ ஸ்ரீ சுகுந்தன் பங்கேற்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Face of Keystone பட்டங்களை ஜூனியர் பிரிவில் Joanna Athena, Miss பிரிவில் Darmisha Krishnan, Mrs பிரிவில் Puvaneswary Kartheegayson, மற்றும் Mr பிரிவில் Alex Arokiasamy வென்றனர்.

சிறார் பிரிவில் Nanshika Saraskumar, Ms பிரிவில் Darmisha Krishnan, Mrs பிரிவில் Shubashini Perumal, Mr பிரிவில் Goschlyynne Ganesh ஆகியோர் வாகை சூடினர்.

Best Photogenic, Best Creativity, Best Catwalk, Best Model போன்ற சிறப்பு விருதுகளும் திறமையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இதற்கிடையில், Grand Sea Malaysia Crowning நிகழ்வில் சிறார் பிரிவில் Nanshika Saraskumar, Miss பிரிவில் Komugi Ganesh, Miss Curvy பிரிவில் Elaneswary, Mrs பிரிவில் Puvaneswary Kartheegayson, Mrs Classic பிரிவில் Shubashini Perumal வெற்றியாளர்களாக மகுடம் சூடினர்.

இலைமறைக் காயாக உள்ள மலேசியாவின் இளம் நட்சத்திரங்களும், அழகும் திறமையும் கொண்ட பெரியவர்களும் ஒன்றிணைந்து ஒளிரச் செய்த மேடையாக இந்நிகழ்ச்சி விளங்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!