Latestமலேசியா

அழிந்து வரும் கிபோன் குரங்கு, ஆமைகளுடன் KLIA-வில் பிடிபட்ட இந்திய நாட்டவர்

செப்பாங், ஏப்ரல்-22, வனவிலங்குக் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக நம்பப்படும் இந்திய நாட்டவர், KLIA விமான நிலையத்தில் கைதாகியுள்ளார்.

அவரது பயணப் பெட்டியில் ஒரு கருப்பு கை கிபோன் குரங்கும், சிவப்பு காதுகள் கொண்ட 6 ஆமைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் KLIA உதவி போலீஸாருடன் இணைந்து வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN அந்நபரைக் கைதுச் செய்தது.

தமிழகத்தின் திருச்சிராப்பள்ளிக்கு செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன் 21 வயது அவ்விளைஞர் கைதுச் செய்யப்பட்டதாக, PERHILITAN தலைமை இயக்குநர் ஜெனரல் டத்தோ அப்துல் காடிர் அபு ஹாஷிம் தெரிவித்தார்.

சந்தேக நபர் மலேசியாவிலிருந்து வனவிலங்குகளை பயணப் பெட்டிகளில் மறைத்து வைத்து கடத்தும் கும்பலுக்கு வேலை செய்வது விசாரணையில் தெரியவந்தது.

2010 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் அனைத்துலக வர்த்தகச் சட்டம் 2008-டின் கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார்.

பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்குகளின் மதிப்பு 12,200 ரிங்கிட்டாகும்.

கருப்பு கை கொண்ட கிபோன் குரங்குகள், மலேசியா, இந்தோனேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் காணப்படும் அழிந்து வரும் இனமாகும்.

அதே சமயம், சிவப்பு காதுகள் கொண்ட ஆமைகள் உலகில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் ஆமைகளாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!