Latestமலேசியா

“அழுகையில் கரைந்த என் தனிமைகள்” – மனதை உருக்கும் காற்பந்து வீரர் ‘Salah’ வின் வார்த்தைகள்

எகிப்து, நவம்பர் 22 – லிவர்பூல்லின் பிரபல காற்பந்து நட்சத்திரமான Mohamed Salah தனது ஐரோப்பிய கால்பந்து பயணத்தின் தொடக்கத்தில் சந்தித்த வேதனைகளை உணர்ச்சி பொங்க பகிர்ந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் தனது ஆரம்ப நாட்களை நினைவுபடுத்திய Salah, அங்கே சென்ற முதல் சில மாதங்களில், தான் ஒரு ‘league’ வீரராக இருந்தபோதும் எல்லோரும் தன்னை புதிய மனிதனை போலவே பார்த்தனர் என்று மனமுருகி கூறினார். யாரும் தனக்கு அந்த அளவிற்கு மதிப்பளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தோல்வியை ஏற்க முடியாது என்று உணர்ந்த தருணமே தனது வாழ்க்கையை மாற்றியுள்ளதாகவும், அப்போது தான் வெற்றி பெறுவதற்காக முழு முயற்சியில் தாம் இறங்கியதாகவும் அவர் விளக்கினார்.

சில நேரங்களில் அவர் குளியலறையில் தனியாக அமர்ந்தும் அழுதுள்ளதாக உணர்ச்சி பொங்க தெரிவித்தார். ஆனால் தன்னுடைய கனவை இலக்காக வைத்து அடுத்த அடியை எடுத்து வைக்க தொடங்கினார்.

இப்போது, தன்னை ஒரு நாட்டின் நம்பிக்கையின் சின்னமாக பார்ப்பது பெரிய பொறுப்பு என்றாலும், அதை தினமும் நேர்மையாக தாம் ஏற்றுக்கொள்வதாக கூறுகிறார் 33 வயதான Salah.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!