
மூவார், மார்ச்-18 – ஜோகூர் மூவாரில் எண்ணெய் தீர்ந்துபோனதால் நெடுஞ்சாலையின் அவசரப் பாதையில் நின்றிருந்த லாரியை, மோட்டார் சைக்கிளில் வந்த இளம் பெண் மோதி, பரிதாபமாக உயிரிழந்தார்.
PLUS நெடுஞ்சாலையின் 136.8-ஆவது கிலோ மீட்டரில் நேற்று மாலை 6.30 மணிக்கு அவ்விபத்து நிகழ்ந்தது.
லாரியை அவசரப் பாதையில் நிறுத்திய அதன் ஓட்டுநர், மற்ற வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாதுகாப்புக் கூம்புகளை சாலையில் வைத்து விட்டு, உதவிக்காக PLUS பணியாளர்களைத் தொடர்புகொண்டார்.
அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், லாரியின் வலப்பக்க நுனியை வேகமாக மோதியது.
இதனால் 22 வயது அப்பெண் தலையில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
லாரி ஓட்டுநருக்குக் காயமேதும் ஏற்படவில்லை.