Latestமலேசியா

அவசர வேளையில் சாலை எச்சரிக்கை விளக்கை கடந்து செல்ல குடும்பத்திற்கு உதவிய P- ஹைய்லிங் ஓட்டுநருக்கு பாராட்டு

கோலாலம்பூர், மார்ச் 12-மருத்துவ அவசரநிலையை எதிர்கொண்டதாக நம்பப்பட்ட ஒரு குடும்பத்திற்கு போக்குவரத்து நெரிசலைக் கடந்து செல்லவும், சிவப்பு விளக்கைக் கடக்கவும் உதவியதற்காக ஒரு P-ஹெய்லிங் ஓட்டுநர் நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த சம்பவம், குடும்பத்திற்கு உதவிய அந்த P- ஹெய்லிங் ஓட்டுநரின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கவனத்தை ஈர்த்தது. தொடக்கத்தில் சாலையில் வழக்கத்திற்கு மாறாக ஒரு கார் இங்கும் அங்கும் நகர்வதைப் பார்ப்பது விசித்திரமாக இருந்ததால் தாம் கடந்து சென்றபோது, ​​உள்ளே யாரோ ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என்று உணர்ந்ததாக பயனர் Nabilladen Threads பதிவிட்டார்.

அவர்கள் சிவப்பு விளக்கில் சிக்கிக்கொண்டது துரதிர்ஷ்டவசமானது. அதிர்ஷ்டவசமாக, ஒரு லாலமோவ் ஓட்டுநர் நிறுத்தி வழியை சுமுகமாக்க முயன்றார்.

வீடியோவில், கார் பயணிகள் பல மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை நிறுத்த முயன்றனர், ஆனால் அவர்கள் அதனை புறக்கணித்தனர்.

அந்த வேளையில் P -Hailing ஓட்டுநரான மோட்டார் சைக்கிளோட்டி தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு போக்குவரத்து நெரிசலை நிர்வகிக்க உதவுவதைக் காண முடிந்தது.

இதனால் சாலையில் சிவப்பு எச்சரிக்கை விளக்கு இருந்தபோதிலும் வாகனம் முன்னேற முடிந்தது. இதனைத் தொடர்ந்து பல இணையவாசிகள் அந் P- hailing மோட்டார் சைக்கிளோட்டியை அவரது செயல் இரக்கமுள்ள மற்றும் தன்னலமற்றதாக இருந்தது குறித்து நன்றி கூறி தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!