
புத்ராஜெயா, ஜனவரி-7 – வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா, வெனிசுவலாவுக்கு அவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு மலேசியர்களை அறிவுறுத்தியுள்ளது.
அந்நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதால், பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அது வலியுறுத்தியது.
இந்நிலையில், தலைநகர் கராக்கஸில் உள்ள மலேசியத் தூதரகம், அங்கு பதிவுச் செய்யப்பட்ட அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
தூதரகம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது.
வெனிசுவலாவில் ஏற்கனவே உள்ள மலேசியர்கள், தூதரகத்துடன் தொடர்பில் இருந்து, உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த அறிவுறுத்தல், மலேசியர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும்.
வெனிசுவலாவுக்கு சிறப்பு கமாண்டோ படையை அனுப்பி அதிபர் நிக்கோலஸ் மடுரோவை அமெரிக்கா கைதுச் செய்து கொண்டுச் சென்றதை அடுத்து, அந்த தென்னமரிக்க நாட்டில் அசாதாரணம் சூழல் நிலவுகிறது.



