
DAP யின் Seputeh நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் அம்னோவின் ஜமால் யூனோஸ் ( Jamal Yunos ) 66,000 ரிங்கிட்டிற்கும் அதிகமாக வழக்கிற்கான செலவுத் தொகையை தீர்க்கத் தவறியதால், நீதிமன்ற ஜஸ்தியாளர்கள் இன்று அவரது வீட்டில் பறிமுதல் மற்றும் விற்பனை உத்தரவை நிறைவேற்றினர்.
மொத்தம் 14 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் நிலுவைத் தொகையை வசூலிக்க அவை ஏலம் விடப்படும் என்று திரேசா கோக்கின் வழக்கறிஞர் எஸ்.என். நாயர் தெரிவித்தார்.
செலவுத் தொகையுடன் இழப்பீடாக தெரசா கோக் மூன்று லட்சம் ரிங்கிட்டை செலுத்தும்படி கடந்த 2022 ஆம் ஆண்டில் jamal Yunos சிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜமால் ஒரு பங்குதாரரின் கணக்கில் மூன்று லட்சம் ரிங்கிட்டை வைப்பில் செலுத்தியிருந்தார்.
ஆனால் செலவுகள் மற்றும் வட்டி உட்பட நிலுவையில் உள்ள RM66,061.65 தொகை செலுத்தப்படாமல் இருந்தது.
பின்னர் மீதியை மீட்க தெராசா கோக் பறிமுதல் மனுவை தாக்கல் செய்தார்.
நீதிமன்ற அதிகாரிகள் காலை 11.40 மணியளவில் ஜமாலின் வீட்டிற்கு வந்து அங்குள் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
2022 ஆம் ஆண்டில், ஜமாலுக்கு மூன்று லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான இழப்பீடு மற்றும் செலவுகளை செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



