
ஈப்போ, ஆகஸ்ட் 4 – கோலா காங்சார் இஸ்தானா இஸ்கண்டாரியாவில் வருகின்ற ஆகஸ்ட் 7 ஆம் தேதி, பேராக் அரச திருமண விழா நடைபெறுமென்று டிக்டோக்கில் வெளியான தவறான தகவல்களைக் கொண்ட வைரல் வீடியோவைத் தொடர்ந்து பேராக் சுல்தான் அலுவலகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி இஸ்தானா இஸ்கண்டாரியாவில் அரச திருமண விழா எதுவும் நடத்தப்படவில்லை என்றும், பொதுமக்கள் பார்வைக்காக ‘அகத் நிக்கா’ விழாவின் எந்தவொரு நேரடி காட்சிகளும் ஒளிபரப்பாது என்றும் அரசு குடும்பம் தெளிவுபடுத்தியுள்ளது.
தொடர்புடைய அந்த டிக்டாக் கணக்கு அறிக்கையின் உள்ளடக்கம் முற்றிலும் பொய்யானதைத் தொடர்ந்து அது பொதுமக்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களிடையே தவறான புரிதலைத் தவிர்க்கவும், பேராக் அரண்மனையின் நற்பெயரைப் பாதுகாக்கவும், இத்தகைய பொறுப்பற்ற செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.