பேங்காக், நவம்பர் 19 – அறிவியல் மீதான தமது தீராத ஆர்வத்தைக் கண்டுபிடிப்புகளுக்கு உரமாக்கி, ஆசியக் கல்வி விருது விழாவில் சிறந்த இடைநிலைப்பள்ளி ஆசிரியருக்கான விருதை தன் வசமாக்கியுள்ளார் தீபன்ராஜ் கார்த்திகேசு.
ஜோகூர் பாரு, தாமான் சுத்ரா இடைநிலைப்பள்ளியின் அறிவியல் ஆசிரியரான இவர் கடந்த நவம்பர் 9ஆம் திகதி பேங்காக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தனது கற்பித்தல் நடைமுறையில் புதுமையை வெளிப்படுத்திச் சாதனையைப் படைத்ததாகக் கூறுகிறார்.
Interview
ஆசிய அளவில் மட்டுமல்லாது மலேசியாவிலும் இவர் Duta Guru Malaysia எனும் விருதையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைப்பு, கற்றல் மூலம் ரோபாட்டிக்ஸ், புத்தாக்கத் திட்டங்கள் எனத் தனது 12 ஆண்டுக்கால ஆசிரியர் பணியில் பல புதுமைகளுக்கு இவர் வித்திட்டுள்ளார்.
அவ்வகையில், அறிவியல் பாடப் போதனையின் போது, ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து கண்டுபிடிப்புகளை உருவாக்குவதை ஒரு அணுகுமுறையாகப் பயன்படுத்துவது, நன்மையைப் பயக்கும் என்கிறார் இவர்.
இவ்வேளையில், தனது வெற்றிக்குத் துணைநின்ற பெற்றோர்களுக்கு மட்டுமல்லாது மாணவர்களுக்கும் அவர் வணக்கம் மலேசியாவின் வழி நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொண்டார்.
தொடர்ந்து மாணவர்களின் சிந்தனைகளைத் தூண்டும் வகையில் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் இலக்கோடு பயணிப்பதாக ஆசிரியர் தீபன்ராஜ் தெரிவித்தார்.