Latestமலேசியா

ஆசியான் மாநாட்டுக்கு ட்ரம்பை அழைத்தை தற்காக்கும் அன்வார்; மலாயாவின் சுதந்திரப் போராட்டத்துடன் ஒப்பீடு

 

புக்கிட் ஜாலில், அக்டோபர்-9,

இம்மாதத் கடைசியில் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்புக்கு சிறப்பு அழைப்பு விடுத்ததை சிலர் எதிர்த்தாலும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அம்முடிவை மீண்டும் தற்காத்து பேசியுள்ளார்.

“மலேசியா அனைத்து உலகத் தலைவர்களுடனும் திறந்த முறையில் பேசும் சுயேட்சையான வெளிநாட்டு கொள்கையைக் கொண்ட நாடு” என்றார் அவர்.

அதோடு, இந்த அழைப்பை மலாயாவின் சுதந்திரப் போராட்டத்துடனும் அன்வார் ஒப்பிட்டார்.

ஒரு காலத்தில் நம்மையும் இஸ்லாத்தையும் ஒடுக்கியக் காலனித்துவ ஆட்சியாளர்கள் என்றாலும், அதே பிரிட்டிஷாரை லண்டனில் குழுவாக சென்றுகண்டு மலாயாவின் சுதந்திரத்திற்கு துங்கு அப்துல் ரஹ்மான் பேச்சுவாத்தை நடத்தினார்.

அந்நாளில் போல, இன்றும் பெரிய வல்லரசுகளுடன் பேசுவது தேச மற்றும் வட்டார நலனுக்கு அவசியம் என, அன்வார் மலேசியாவின் அழைப்பை நியாயப்படுத்தினார்.

தனது தான்தோன்றித்தனமான போக்குகளாலும், இஸ்ரேலுடன் கொண்ட நெருக்கத்தாலும் உலகளவில் பெரும் சர்ச்சைச்குரியவராக பார்க்கப்படும் ட்ரம்பின் மலேசிய வருகை, அனைத்துலக அளவில் இந்நாட்டின் பெயரை பாதிக்கும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் அன்வாரோ, “உலகளாவிய உரையாடலைத் தவிர்க்கக் கூடாது” என, புக்கிட் ஜாலில் Axiata Arena அரங்கில் நடைபெற்ற Solidarity with Gaza அல்லது காசா ஆதரவுப் பேரணியில் பேசிய போது சொன்னார்.

Global Sumud Flotilla மனிதநேய உதவியின் போது இஸ்ரேலியப் படைகளால் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ள 23 மலேசியத் தன்னாவலர்களும் அதில் பங்கேற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!